பண்டைய இலங்கையில் போரும் நல்லிணக்கமும் | இலங்கையின் இனவாத அரசியல்- ஒரு வரலாற்றுப் பார்வை | பி. ஏ. காதர்
பண்டைக் காலங்களில் அவ்வப்போது இடம்பெற்ற தென்னிந்தியப் படையெடுப்புகளை உள்நாட்டில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்மீது தொடுத்த யுத்தங்களாக சில பேரினவாத சித்தாந்தவாதிகள் சித்திரிக்கின்றனர். அத்தகைய யுத்தங்கள் நிலப்பிரபுத்துவ மன்னராட்சி காலத்துக்கே உரிய லட்சணமாகும். இத்தகைய யுத்தங்கள் உலகம் பூராவும் நடைபெற்றுள்ளன.
உதாரணத்துக்கு சொல்வதானால் ரோஜாக்களின் யுத்தத்தைக் கூறலாம். கடந்த காலவரலாற்றை திரிபுபடுத்தாமல் அப்படியே விளக்கும் போதும் கூட சில வரலாற்று கொடுமைகளை மறக்கத்தான் வேண்டி இருக்கிறது.
கடந்த காலங்களில் முன்னோர் செய்த அட்டூழியங்களுக்காக இன்றைய தலைமுறையை தண்டிப்பது நியாயமாகிவிட்டால் அமெரிக்கா கண்டமே வெறிச்சோடிவிடும். ஏனெனில் அங்குமுன்னர் வாழ்ந்த ஆதிக்குடிகளை அழித்தொழித்துவிட்டு அவர்களது பிணக்குவியல்மீது உருவாக்கப்பட்ட வெள்ளை நாகரிகம் தான் இன்றைய அமெரிக்காவாகும்.
அவ்வப்போது வெளிநாட்டு படையெடுப்பால் பாதிக்கப்பட்டாலும் கூட இலங்கை அத்தகைய பாரிய யுத்த அழிவுக்கு உள்ளாக்கவில்லை என்பதே உண்மை. அது மாத்திரமல்ல வியக்கத்தக்க விதத்தில் இன நல்லுறவு நீண்டகாலம் இலங்கையில் நிலவிவந்தது.
#historyofsrilanka #srilankantamils #sirponramanathan #PonnambalamRamanathan #Tamilpoliticalleader #CeylonNationalCongress #Tamilcommunity #tamilshistory #sinhalatamil #SinhalaTamil #TamilPolitics