மருந்தாகும் மசாலாப் பொருள்கள் | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால.சிவகடாட்சம்

Thursday 8 September 2022
00:00
00:00

கடுகு, பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படக்கூடிய கூடுதலான உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். பாலூட்டும் தாய்மாருக்குப் பாற்சுரப்பை ஊக்குவிக்கும். மூல வியாதியைத் தவிர்க்கும். சமையலுக்குத் தாளிதம் செய்வதற்கு உதவும். பொதுவாக ஹோர்மோன் சமநிலை பிறழ்வு காரணமாக இளம் வயதுப் பெண்களுக்கும் நடுவயது கடந்த பெண்களுக்கும் மாதவிலக்கின்போது கூடுதலாக இரத்தம் வெளியேறுவதுண்டு. இதைக் கட்டுப்படுத்தப் பயன்படும் மூலிகைகளுள் கடுகும் ஒன்று. சீரகத்தில் இரும்புச்சத்து நிறைய உண்டு. பொதுவாக இந்தச் சத்துக்குறைவினால் பெண்கள், குழந்தைகள் மற்றும் பருவ வயதினரே கூடுதலாகப் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் உணவில் சீரகத்தைக் கூடுதலாகச் சேர்த்துக் கொள்வது நல்லது. பருவம் அடைந்த பெண்களுக்கு மாதவிலக்கின்போது வெளியேறும் இரத்தத்துடன் இரும்புச்சத்து இழக்கப்படுவதால் இவர்களுக்குச் சீரகம் சேர்ந்த கறி சமைத்துக்கொடுக்கும் வழக்கம் இலங்கை மக்களிடம் இருப்பதை இவ்விடத்தில் நினைவுகூரலாம். பெண்களில் மாதவிலக்குச் சுழற்சி சீராக நடைபெறுவதற்கு சீரகம் உதவுகிறது. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு தேக்கரண்டி அளவு  சுத்தமான வெந்தயத்தை எடுத்து 200 mL (ஒரு கப்) தண்ணீரில் ஊறவைக்

More ways to listen