மருத்துவர் ஐடா சோபியா ஸ்கடர் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன்
Tuesday 5 July 2022
00:00
08:32
சென்னையில் 1890 களில் ஒருநாள் இரவு பிரசவத்தின் போது மருத்துவம் பார்க்க ஒரு பெண் மருத்துவர் இல்லாத காரணத்தால் 3 பதின்ம வயதுப் பெண்கள் மரணித்தமை ஐடா ஸ்கடர் என்ற அமெரிக்க இளம்பெண்ணை மருத்துவர் ஆக்கியது.
ஐடா சோபியா ஸ்கடர் – மருத்துவ உலகின் வரலாற்றை மாற்றி, புதிய அத்தியாயம் படைத்த பெண் மருத்துவ வல்லுநர்களில் ஒருவர் என்று அமெரிக்காவில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
ஐடா தான் ஒரு மருத்துவராக வந்து இந்தியாவில் பெண்களுக்கு மருத்துவம் செய்து மறுவாழ்வு கொடுக்கவேண்டும் என்று உறுதி பூண்டார். பெற்றோரிடம் தான் அமெரிக்கா சென்று மருத்துவம் பயின்று இந்தியாவுக்குத் திரும்பி பெண்களுக்கு மருத்துவம் செய்ய திடசங்கற்பம் பூண்டுள்ளதாகத் தெரிவித்து அமெரிக்கா திரும்புகிறார்.

1900 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி வேலூருக்கு வந்து தந்தையாருடன்(ஜோன் ஸ்கடர்) ஐடா இணைந்து பணியாற்றுகிறார். ஏப்ரலில் தந்தையார் காலமானதைத் தொடர்ந்து மிஷன் பங்களாவில் உள்ள அறையில் ஒரு படுக்கையுடன் ஐடா தனது சிகிச்சை நிலையத்தை ஆரம்பிக்கிறார். வேலூரில் 1902 இல் மேரி தபேர் ஷெசல் ஞாபகார்த்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனையை 40 படுக்கை வசதிகளுடன் ஆரம்பித்தார்.
#idascudder #johnscudder #scudderfamily #TheScudderAssociationFoundation #firstmedicalmissionary #missionaries #missionaryjaffna #Vellore #CMCWorld
More ways to listen