டொனமூர்க் குழுவினரின் சிபார்சுகளும் தமிழ் தலைவர்களின் நிலைப்பாடும் | இலங்கையில் அடையாள அரசியல் | கலாநிதி சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம்

Wednesday 3 August 2022
00:00
00:00

“பிரதானமாக, வடமாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் காணப்படும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நிலை எமக்கு மிகுந்த கவலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கட்கென எவ்வகையான ஒரு பிரதிநிதித்துவத்தையேனும் ஏற்படுத்துதல் வேண்டும் என்பது பற்றியே நாம் இங்கு ஆராய்தல் வேண்டும். நாம் காட்டிய பொதுக்காரணங்களைத் தவிர்த்தாலும், அம்மக்கட்கு வாக்குரிமை அளிக்கப்படுதலும், அவர்கட்குச் சமமான போதிய கல்வி வாய்ப்புக்கள் அளிக்கப்படுதலுமே அவர்களின் நிலையைச் சீர்த்திருத்துவதற்கான வழிகள் என்று நாம் கருதுகிறோம்.” (டொனமூர் அறிக்கை) எமது சுதந்திரப் போராட்ட தலைவர்களை விட எம்மை பொருளாதார ரீதியாகச் சுரண்டி ஆட்சி செய்த காலனித்துவ வாதிகள் மக்களின் அரசியல் சுதந்திரத்தையும் சமூகவிடுதலையையும் கூடுதலாக நேசித்துள்ளார்கள் எனலாம். இது போன்றதொரு நேசிப்பை யாழ்ப்பாண மாணவ காங்கிரசிடமும் காணக்கூடியதாக இருக்கின்றது. 1920ம் ஆண்டில் மானிங்கினால் அறிமுகப்படுத்தப்பட்ட இனவாரிப் பிரதிநிதித்துவத்தினை, பிரித்தானியரின் பிரித்தாளும் நடவடிக்கை இது என பல அரசியல் அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.இவ்வாறு பிரித்தாளும் தந்திரங்கள் பற்றி சிலாகித்துப் பேசுவோர் இவ்வா

More ways to listen