தொலைய விடுதல் நியாயமா? | வடக்கின் விருட்சங்கள் | சாரதாஞ்சலி மனோகரன்

Monday 9 May 2022
00:00
00:00

தற்காலத்தில் உலகளாவிய ரீதியிலே பாரம்பரிய அறிவைப் பொறுத்தவரையில் சந்திகளுக்கிடையே சமத்துவமற்றதோர் நிலைமையே காணப்படுகிறது. அதற்கு இலங்கையும், வன்னிப்பிராந்தியமும் கூட விதிவிலக்காகி விடவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதோர் நிலைமையாகும்.  புதிய அபிவிருத்தி உருவாக உருவாக, மரங்கள் வழங்கும் சேவைகளை நவீன கண்டுபிடிப்புகள் பிரதியீடு செய்யத் தொடங்கும். இதனால் மரங்களிலிருந்து நாம் நேரடியாகப் பெறும் பயன்கள் குறைந்துகொண்டே செல்லும். இது தொடர்ந்து நடைபெற, மெது மெதுவாக அந்த அனுபவ அறிவு அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படாமலே போகும்.  எம்மில் எவருக்கு அத்தி மரத்தை அடையாளம் காணத்தெரியும்? கல்லத்தி, காட்டத்தி, குருகத்தி, கொடியத்தி, சிற்றத்தி, சீமையத்தி அல்லது தேனத்தி, செவ்வத்தி, அத்தி, நீரத்தி, பேயத்தி, பேரத்தி, மரந்தின்னியத்தி, மலையத்தி, விழலத்தி போன்ற அத்தியின் வகைகள் பற்றித் தெரியும்?  #ezhuna #northern #Cluster_Fig_Tree #SriLanka #வடக்கின்_விருட்சங்கள்

More ways to listen