இலங்கையின் பாலுற்பத்தியும் கால்நடை உணவுகளும் | இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் | Dr. S. கிருபானந்தகுமாரன்

Tuesday 13 December 2022
00:00
00:00

மாடு ஆடு போன்ற கால்நடைகள் இயற்கையில் கிடைக்கும் புற்களை செரிமானம் செய்யத் தக்க உணவுக் கால்வாய் தொகுதியை கொண்டவை. குறிப்பாக அவற்றின் அசையூன் இரப்பையில் உள்ள நுண்ணுயிர்கள் [Rumen microbes] புற்களில்  உள்ள நார்ச்சத்தையும் [fiber]  ஏனைய உயிர்ச்சத்துகளையும் சமிபாடடையச் செய்வதன் மூலம் தேவையான சத்துக்களை பெற்றுக் கொள்கின்றன. ஆரம்ப காலத்தில் மாடுகள் முற்று முழுதாக புற்களையும் மர இலைகளையும் செடிகளையும் நம்பியே வாழ்ந்தன. மனிதனின் பயன்பாட்டுக்கு கால்நடைகள் வந்த பின் மேலதிகமாக விவசாய மீதிகளையும் வீட்டு உணவுக் கழிவுகளையும் உட்கொண்டன. இன்று அவை அவற்றின் உற்பத்திக்கு அமைய விசேடமாக தயாரிக்கப்பட்ட கால்நடை செறிவு உணவையும் [concentrates]  சேர்த்து உட்கொள்கின்றன. அதிக பாலுற்பத்திகளை தரத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள இன்றைய கால்நடைகள் அதற்கேற்ப தரமான உணவுகளை உண்ண வேண்டியது அவசியமாகும். இலங்கையின் கால்நடைகளை பொறுத்தவரையில் நவீன உணவு முறைகள் மிகக்குறைவாகவும் பாரம்பரியமான முறைகள் அதிகளவிலும் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் வருடம் முழுவதும் தேவையான பசுந்தீவனங்கள் கிடைப்பதும் இல்லை. பாலுற்பத்தியில் தன்னிறைவு காண முடியாத நிலைக்

More ways to listen