மருந்தாகும் மசாலாப் பொருள்கள் - பகுதி 2 | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால. சிவகடாட்சம்
செமியாக்குணம், வாய்வு என்பற்றைத்தீர்த்து வைக்கும் சிறந்த மருந்தாகப் பெருங்காயம் உள்ளது. எளிதில் சமிபாடு அடையாத போஞ்சி கடலை மற்றும் பருப்பு வகைகளைச் சமைக்கும்போது பெருங்காயத்தையும் சேர்த்துக்கொள்வதன் மூலம் வாய்வுக்கோளாறுகள் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ளலாம். வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு மருந்தாக இஞ்சி நெடுங்காலமாகப் பயன்பட்டு வந்துள்ளது. குடல் வாயுவை வெளியேற்றவும் உணவுப்பாதையைச் சீராக்கவும் இஞ்சி உதவுகின்றது. நல்ல கொலெஸ்ரறோலைப் (HDL cholesterol)) பாதிக்காது கெட்ட கொலெஸ்ரறோலை (LDL cholesterol) மாத்திரம் குறைக்கும் குணம் உள்ளிக்கு உள்ளது. இரத்தக்குழாய்களை விரிவடையச்செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை சிறிதளவு குறைக்கவும் உள்ளி உதவுகின்றது. உள்ளியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற வியாதிகள் தோன்றும் அபாயத்தை ஓரளவு குறைக்கமுடியும் என்று நம்பப்படுகிறது. இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் குணமுடைய கறுவாப்பட்டை நீரிழிவு நோயாளர்க்கு உபயோகமானது.கறுவா இரத்தத்தை ஐதாக்குவதால் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் இயல்பு உடையது.அதிக அளவிலான கறுவா கெடுதி விளைவிக்கக்கூ