வடக்கின் விருட்சங்கள் : தொலையாது காப்போம்!-வரலாறு சொல்லும் வானுயர்ந்த சோலைகள் | வடக்கின் விருட்சங்கள் | சாரதாஞ்சலி மனோகரன்

Thursday 15 July 2021
00:00
00:00

இலங்கையிலேயே அதிகளவு இயற்கைக்காடுகளைக் கொண்ட  பிராந்தியங்களுள் வடமாகாணமும் ஒன்று. வடமாகாணத்திலே வன்னிப்பிராந்தியத்தின் கணிசமான நிலப்பரப்பு இயற்கையான காடுகளைக் கொண்டிருக்கிறது.  பல தசாப்தங்கள் நிலைத்து ஓய்ந்து போன யுத்தத்தைக் கூட சளைக்காமல் எதிர்கொண்டு நிமிர்ந்து நின்ற வானுயர்ந்த சோலைகள் இன்று என்றுமில்லாதவாறு பெரும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கின்றன.  பெருகி வரும் சனத்தொகையும் காணிகளுக்கான தேவையும் மீள்குடியேற்றமும் அபிவிருத்தியும் இலகுவாய் வருமானம் பெறும் நோக்கங்களும் எனப் பலதும் பத்துமாய் மனித மையக் காரணிகள் முன்னே வந்து நிற்கையில்  எங்கள் காடுகளுக்கான முன்னுரிமை குறைந்து தான்  விடுகிறது.

More ways to listen