வட இலங்கையில் சாதி: பிரித்தானிய காலனிய அரசின் கொள்கையும் நடைமுறைகளும் - 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி குறித்த நுண்ணாய்வு - பகுதி 3 | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம்

Wednesday 21 December 2022
00:00
00:00

கிறிஸ்தவ மிசனரிகளின் மதம் பரப்பும் பணியும் சாதிப் பிரிவினைகளாலும், சாதி உணர்வாலும் பாதிக்கப்பட்டது. மிசனரிகள் தமது பணிகளை ஆரம்பித்து பல்லாண்டுகள் கழிந்த பின்னரும் 1850களில் கூட சாதிப்பிரச்சினை பலமான ஒரு சக்தியாக இருப்பதை உணரமுடிந்தது. யாழ்ப்பாண நகரத்தில் வண்ணார்பண்ணை வெல்சியன் மெதடிஸ் பாடசாலையில் சலவைத்தொழில் சாதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சேர்க்கப்பட்ட போது உயர்சாதியினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அந்த மாணவரை பாடசாலையில் இருந்து மிசனரிகள் நீக்கிவிட்டனர். பின்னர் 1847ஆம் ஆண்டில் வெல்சியன் மிசன் பாடசாலை ஒன்றில் நளவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சேர்க்கப்பட்டபோது, கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. உயர்சாதி மாணவர்கள் தாமாகவே பாடசாலையில் இருந்து விலகிக்கொண்டனர். பாடசாலைகளில் வெவ்வேறு சாதிப் பிள்ளைகளிடையே ஊடாட்டமும், தொடர்பும் ஏற்பட்டமை நல்லதொரு முன்னேற்றமே ஆயினும் சாதி உணர்வு தமிழர்களிடையே மேலோங்கியே இருந்தது. கிறிஸ்தவ மதத்தில் எந்தவொரு பிரிவிலாவது ஒருவர் புதிதாகச் சேர்ந்து கொண்டால், அவர் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவராகவே இருத்தல் வேண்டும் என்று சந்தேகிக்கும் நிலை யாழ்ப்பாணத்தில் நீடித்தது. இவ்வாறே கி

More ways to listen