காந்தியின் வருகையும், நேருவின் விஜயமும் | கண்டி சீமை | இரா.சடகோபன்
1930 களை அடுத்து வந்த தசாப்தத்தில் இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களை பொறுத்தவரையில் சில சுவாரஸ்யமான அரசியல் மற்றும் தொழிற்சங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இத்தகைய நிகழ்வுகளில் ஜஹவர்லால் நேருவின் இலங்கைக்கான இரண்டு விஜயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவரது முதலாவது விஜயம் 1931 இலும் இரண்டாவது விஜயம் 1939 இலும் இடம்பெற்றன. இதற்கு முன் மகாத்மா காந்தி 1927ஆம் ஆண்டு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். மகாத்மா காந்தி அவர்களும் பண்டித நேரு அவர்களும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கெதிராக மேற்கொண்ட சுதந்திர போராட்டங்கள் காரணமாக உலகப் புகழ் பெற்றிருந்தார்கள். 1930 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் "டைம்ஸ்" சஞ்சிகை மகாத்மா காந்தியை "உலகின் முதன்மை மனிதன்" என்று பெயரிட்டது. இவர்களது புகழ் இலங்கையிலும் பெரிதாகப் பரவியிருந்தது. இலங்கை எங்கும் இவர்களுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, பதுளை ஆகிய பிரதேசங்களில் இவர்களைக் காண பெருந்திரளான மக்கள் கூடினர். மகாத்மா காந்தி அவர்களின் இலங்கை வருகையை விட ஜவகர்லால் நேருவின் வருகையே இந்திய தமிழர்களைப் பொறுத்தவரையிலும் தோட்டத் தொழிலாளர்களை பொறுத்தவரையிலும் முக