தீகவாபியின் குடிமகனான தமிழ் வணிகன் பற்றிய குடிவில் கல்வெட்டு | இலங்கையில் பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர் | என்.கே.எஸ்.திருச்செல்வம்
அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகரின் தெற்கில் 13 கி.மீ. தூரத்தில் இறக்காமம் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தின் வடக்குப் பக்கத்தில் மாயக்கல் எனும் சந்நியாசி மலை காணப்படுகிறது. இதை அடுத்து மாணிக்கமடு எனும் சிறிய கிராமமும், ஓட்டுத் தொழிற் சாலை யும் அமைந்துள்ளன. இவற்றைக் கடந்தவுடன் குடிவில் எனும் கிராமம் காணப்படுகிறது இக்கிராமத்தின் வடகிழக்கில் குடிவில் குளம் அமைந்துள்ளது. குளத்திற்கு சற்று தூரத்தில் கல்லோயா எனும் பட்டிப்பளை ஆறு ஓடுகிறது. கிராமத்தின் இடது பக்கமாக கல்லோயா ஆற்றுக்குச் செல்லும் பாதையில், ஆற்றுக்கு அருகில் மலைப்பாறைகள் நிறைந்த ஒரு காடு காணப்படுகிறது. இங்கு இயற்கையான கற்குகைகள் சில காணப்படுகின்றன. இவற்றில் ஒரு கற்குகையில் கற்புருவம் வெட்டப்பட்டு அதன் கீழே பிராமி எழுத்துக்களில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல் வெட்டில் தான் இப்பகுதியில் வாழ்ந்த தமிழ் வணிகன் மற்றும் அவ னது மனைவி பற்றிய விபரம் காணப்படுகிறது. இக்கல்வெட்டில் “திகவாபி பொரண வனிஜஹ .....ய புதஹ பரியய தமெத திசய லேன” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இதை பேரா சிரியர் பரணவிதான “The cave of the Merchants who are the citizens of Dighavapi, of