தமிழ் வணிகன் பற்றிக் கூறும் பெரிய புளியங்குளம் கல்வெட்டுக்கள் | இலங்கையில் பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர் | என்.கே.எஸ்.திருச்செல்வம்

Saturday 5 November 2022
00:00
00:00

வவுனியா நகரின் வடகிழக்கில் 13 கி.மீ தொலைவில் உள்ள பெரிய புளியங்குளம் எனும் இடத்தில் உள்ள குளத்தின் அருகில் ஒரு உயரமான கற்பாறைத்  தொகுதி காணப்படுகிறது. சுமார் 100 அடி உயரமான ஒரு நீண்ட பாறையின் மீது மூன்று பெரிய கற்பாறைகளும், ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய கற்பாறைகளும் தூக்கி வைத்தாற்போல் இயற்கையாகவே அமைந்துள்ளன இங்கு மொத்தமாக 38 பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. மேற்குறிப்பிட்டுள்ள 38 கல்வெட்டுக்களில் 2 கல்வெட்டுக்கள்  தமிழர் பற்றிக் கூறுகின்றன. இதில் தமிழர் எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் “தமெத வனிஜ கபதி விசகஹ லேன” என பொறிக்கப்பட்டுள்ளது. இதை பேராசிரியர் பரணவிதான “The cave of the householder Visakha, the Tamil Merchant” என மொழிபெயர்த்துள்ளார். இது தமிழ் வணிகனான குடும்பத் தலைவன் விசாகனின் குகை எனப் பொருள்படும். இக்கல்வெட்டு Inscriptions of Ceylon-Volume 1 எனும் நூலில் 356 ஆவது கல்வெட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

More ways to listen